Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜயபாஸ்கரின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து: அழுத்தம் கொடுக்கும் வருமான வரித்துறை

விஜயபாஸ்கரின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து: அழுத்தம் கொடுக்கும் வருமான வரித்துறை
, சனி, 1 செப்டம்பர் 2018 (14:59 IST)
அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் பெற்றதற்கான ஆதரங்கள் இருப்பதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருமான வரித்துறையினர் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் பரிந்துரைத்துள்ளது. 
 
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர்கே.நகர் இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அதே ஆண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.
 
அப்போது விஜயபாஸ்கரின் வீட்டிலிருந்து ஆர்கே.நகர் இடைத்தேர்தலுக்கு ரூ.89 கோடி பணப்பட்டுவாடா பணம், அதை எந்தெந்த அமைச்சர்களுக்கு பிரித்து வழங்குவது உள்ளிட்ட ஏராளமான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
 
சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விஜயபாஸ்கரின் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது அரசு பணி பெற்றுதருவதாகவும், பணியிட மாறுதல் உத்தரவுகளை பெற்றுத்தரவும் பலரிடம் லஞ்சம் பெற்றதை அமைச்சரின் தந்தை சின்னத்தம்பி ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். 
 
இந்நிலையில், இதுகுறித்து வருமான வரித்துரையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் எவ்வளவு தொகை, எந்த நாளில் யாரிடம் லஞ்சமாக பெற்றார் என்பன உள்ளிட்ட விவரங்களையும் குறிப்பிட்டுள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்