Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூர்யா சொன்னதுல என்ன தப்பு இருக்கு! – காங்கிரஸிலிருந்து வந்த ஆதரவு குரல்

Advertiesment
சூர்யா சொன்னதுல என்ன தப்பு இருக்கு! – காங்கிரஸிலிருந்து வந்த ஆதரவு குரல்
, திங்கள், 14 செப்டம்பர் 2020 (18:10 IST)
நீட் தேர்வு குறித்து சூர்யா விடுத்த அறிக்கையில் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் பேசியதில் தவறில்லை என காங்கிரஸ் பிரமுகர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நேற்று நடந்து முடிந்த நிலையில், முன்னதாக நீட் தேர்வு பயத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சூர்யா தனது கருத்துகளை அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் அவர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகள் தெரிவித்துள்ளதாக அவர்மீது புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்பொன்ஸ் “உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதியரசர்கள் வலிந்து அழைத்தும் கொரோனாவுக்கு பயந்து நீதிமன்றங்களுக்கு வர மறுத்துவிட்டனர்.அவர்களை நீதிமன்றத்திற்கு பயமின்றி வாருங்கள் என்று நீதியரசர் சுப்பிரமணியன் உத்தரவிடமுடியுமா? பாவம் மாணவர்கள்! சூரியா சொன்னதில் நீதிமன்ற அவமதிப்பு இல்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீடியோ காலில் வந்து அதை காட்டிய ஆசாமி! – அதிர்ச்சியடைந்த பெண்!