Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தவிர்க்க முடியாத தலைவன் – சூர்யாவுக்கு மதுரையில் ரசிகர்கள் போஸ்டர்

Advertiesment
தவிர்க்க முடியாத தலைவன் – சூர்யாவுக்கு மதுரையில் ரசிகர்கள் போஸ்டர்
, திங்கள், 14 செப்டம்பர் 2020 (16:43 IST)
நீட் தேர்வு பதட்டத்தில் மாணவர்கள் தற்கொலை விவகாரம் குறித்து நடிகர் சூர்யா பேசியதற்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வைரலாகியுள்ளன.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நேற்று நடந்து முடிந்த நிலையில், முன்னதாக நீட் தேர்வு பயத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சூர்யா தனது கருத்துகளை அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.

அவரது கருத்துகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் அதிகரித்து வரும் நிலையில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது. அதில் ”திரைப்பட வசனங்களில் மட்டும் குரல் கொடுக்கும் திரைநாயகன் அல்ல.. சமூக பிரச்சினைகளுக்கு முதல் குரல் கொடுக்கும் தவிர்க்க முடியாத தலைவன்” என்று புகழ் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு, 1 மணி நேரம் 30 கேள்விகள்: அண்ணா பல்கலை அறிவிப்பு