Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதிய ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசி பெற்ற தமிழிசை சங்க நிர்வாகிகள்...

முதிய ஆசிரியர்களின்  காலில் விழுந்து ஆசி பெற்ற  தமிழிசை சங்க நிர்வாகிகள்...
, வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (13:18 IST)
ஆசிரியர் தினத்தையொட்டி அகவை முதிர்ந்த ஆசிரியர்கள் வீடுகளுக்கு சென்று பாராட்டிய கருவூர் திருக்குறள் பேரவை மற்றும் தமிழிசை சங்கம் நிர்வாகிகள் – காலில் விழுந்து வணங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தினையொட்டி, நேற்று  ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. 
 
இதனையொட்டி, மத்திய, மாநில அரசுகள் , பள்ளிக்கட்டமைப்புகளிலும் மாணவர்கள் கல்வித்திறனில் அக்கறை காட்டுகின்ற ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி போற்றினர்.
 
இதே போல அரிமா சங்கம் போன்றவைகளும் ஆசிரிய மாமணி என்ற விருதினை வழங்குகின்றது. இந்த வகையில், கருவூர் திருக்குறள் பேரவை மற்றும் காந்திகிராமம் ஷைன் லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய அணுகுமுறையாக ஆசிரியர் பணியாற்றி 20 வருடங்களுக்கு முன்னர் ஒய்வு பெற்ற எஸ்.லட்சுமி நாராயணன் மற்றும் 85 வயதான எம்.ரத்தினம் ஆகியோருடைய வீடுகளுக்கு கருவூர் திருக்குறள் பேரவை செயலர் மேலை.பழநியப்பன், தமிழிசை சங்க தலைவர் க.ப.பாலசுப்பிரமணியன், கரூர் காந்திகிராமம் ஷைன் லயன்ஸ் சங்க இயக்குநர் சீனிவாசபுரம் ரமணன், திருமதி வித்யா, பத்திர விற்பனையாளர் ராமமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று நூலாடை அணிவித்து பரிசு பொருட்கள் வழங்கியதோடு, அவர்களின் ஆசிரியர் பணிகளை பாராட்டி பேசியதோடு, ஆசிரிய பெருமக்களிடம் வாழ்த்து பெற்றனர்.
 
இரு ஆசிரியர்களும் குடும்பத்தார் சார்பில் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர், இந்த நிகழ்ச்சி இந்த பகுதியில் மட்டுமில்லாமல் அனைவரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”ஆபாச படம் பார்ப்பதில் ஒன்றும் தவறில்லை”: சட்டத் துறை அமைச்சர் விளக்கம்