Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திரை பிரபலம் தேவயானி மற்றும் நகுலின் தந்தை மரணம்

Advertiesment
திரை பிரபலம் தேவயானி மற்றும் நகுலின் தந்தை மரணம்
, புதன், 17 ஜனவரி 2018 (11:11 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கிய நடிகை தேவயானி மற்றும் நடிகர் நகுலின் தந்தை ஜெய்தேவ் பேட்டர்பெட், 73 வயதாகும் இவர் இன்று அதிகாலை காலமானார்.
தமிழ் சினிமாவில் 90களில் வந்த நடிகைகளில் மிகவும் பிரபலமான நடிகை தேவயானி. இவரை இப்போதும் பலரால் மறக்க முடியாது. அப்படி ரசிகர்களின்  மனதில் தற்போதும் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை தேவயானி. இவருடைய தம்பி நகுலும் சினிமாவில் நாயகயான வலம் வருகிறார். இவர்களின் தந்தை  ஜெய்தேவ் பேட்டர்பெட், 73 வயதாகும் இவர் இன்று அதிகாலை காலமானார். இவரது இறுதி ஊர்வலம் இன்று மதியம் 1.30 மணியளவில் நடைபெற இருக்கிறது. 
 
அன்னாரது உடல் 101 B, பிரின்ஸ் வில்லா அபார்ட்மென்ட்ஸ், 15, ஜெகதாம்பாள் தெரு, தியாகராய நகர், சென்னை 17 என்ற முகவரியில் இறுதி அஞ்சலிக்காக  வைக்கப்பட்டுள்ளது. நெசப்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. தற்போது திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேலு பிரபாகரன் இயக்கும் ‘கடவுள் 2’