கரூர் மாவட்டம் காட்டுமுன்னூர் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம். இவர் கடந்த 1 வருடம் முன்பாக நெரூர் பகுதியைச் சேர்ந்த அனிதாவை திருமணம் செய்துள்ளார். நேற்று இரவு அனிதா தூக்கு போட்டு இறந்துவிட்டார் என்று பெண்ணின் தாயாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் ஜீவானந்தம், ஜீவானந்தத்தின் தாய் லட்சுமி வரதட்சணைக் கொடுமைப் படுத்தி அனிதாவை அடித்து தூக்கில் தொங்க விட்டதாக மாமியார் மற்றும் கணவர் மீது அனிதாவின் உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து இன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தபோது அனிதாவின் உறவினர்கள் ஜீவானந்தம் ஜீவானந்தத்தின் தாய் மீது தாக்குதல் நடத்த முற்பட்டபோது பரபரப்பு ஏற்பட்டது.
அருகில் இருந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த்னர். இந்நிலையில் 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது குறித்து பெண்ணின் உறவினர கூறும் கார் வாங்க வேண்டும் என்று கூறி 3 லட்சம் கேட்டதாகவும் அதனை தருவதாக கூறினோம் ஆனால் அதற்குள் தங்கள் பெண்ணை அடித்து கொன்றுவிட்டதாக கூறினார்
மேலும் இறந்த பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றனர். இந்நிலையில் கோட்டாட்சியர் சந்தியா விசாரணை மேற்க்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும என்ற உறுதியை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.