காணாமல் போன முகிலன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரைப் போலிஸார் தூங்க விடாமல் சித்ரவதை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். உடனே அங்கிருந்து சென்னை அழைத்துவரப்பட்ட அவரை சிபிசிஐடி போலீஸார் கஸ்டடியில் எடுத்தனர். அதன் பின்னர் கரூரை சேர்ந்த பெண் ஒருவர் முகிலன் அளித்த பாலியல் புகாரில் முகிலன் கைது செய்யப்பட்டார். முகிலனின் உடல்நலம் சரியாக இல்லாத காரணத்தால் அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து நேற்று கரூர் நீதிமன்றத்தில் போலிசார் ஆஜர் படுத்தினர். அதையடுத்து அவரை 15 நாட்களுக்கு நீதிமன்றக்காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டு திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து திருச்சிக்குக் கிளம்பும்போது முகிலன் செய்தியாளர்களிடம்’ என்னை யாரோ கடத்தி சென்று சித்ரவதை செய்து அனுப்பினர். இப்போது போலிஸ் என்னை கைது செய்து இரவு பகலாக தூங்கவிடாமல் சித்ர்வதை செய்கின்றனர்’ எனக் கூறினார்.