ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாய் ஏமாற்றியதோடு, ரூ.50 லட்சம் பணம் பறித்ததாக எழுந்த புகாரில் அதிமுக எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் நாசர் மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிமுக எம்பி அன்வர் ராஜாவின் மகன் நாசர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னுடன் மூன்று மாதங்கள் வாழ்ந்ததாகவும், பின்னர் தன்னுடைய சேமிப்பான ரூ.50 லட்சம் மற்றும் ரூ.10லட்சம் மதிப்பிலான நகையை பெற்று கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் சென்னையை சேர்ந்த பிரபல்ல என்றா பெண் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார்
இந்த நிலையில் இன்று காரைக்குடி பள்ளிவாசலில் அன்வர் ராஜா திருமணம் நடைபெறவிருந்த நிலையில் பள்ளிவாசல் முன் போராட்டம் நடத்திய பிரபல்லா, பள்ளிவாசல் ஜமாத்தாரிடம் திருமணத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜமாத்தார் அன்வர்ராஜா மகனின் திருமணத்தை நிறுத்தினார். ஆனால், நிறுத்தப்பட்ட நாசரின் திருமணம் மற்றொரு ஜமத்தால் நடத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரபல்லா கொடுத்த புகாரின் அடிப்படையில், வன்கொடுமை செய்தல், பணத்தை மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நாசார் அலி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து நாசரிடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.