Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

TN Budget 2022: 12 மணி வரை பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் என்னென்ன??

TN Budget 2022: 12 மணி வரை பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் என்னென்ன??
, வெள்ளி, 18 மார்ச் 2022 (12:02 IST)
தமிழ்நாடு 2022-23 ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

 
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். இந்நிலையில் 12 மணி வரை பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் என்னென்ன என்பதன் தொகுப்பு இதோ... 
 
# மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி திட்டத்திற்கு 162 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
# வட சென்னையில் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கைப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்டவைகளுக்காக சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் செலவில் வளாகம் 
# ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வெல்லும் அளவுக்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு
# வானிலையை கணிக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
# பயிர்கடன் தள்ளுபடிக்காக - 2,531 கோடி ரூபாய், நகைக்கடன் தள்ளுபடிக்காக - 1,000 கோடி ருபாய், சுய உ தவி குழுக்களின் கடனுக்காக - 600 கோடி ரூபாயும் என மொத்தம் 4,131 கோடி ரூபாய் ஒதுக்கீடு
# முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்டியில்லா பயிர் கடன் வழங்க இந்த ஆண்டு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு
# அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்
# அரசு ஊழியர் ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படி உயர்விற்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
# இந்து சமய அறநிலையத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.340.87 கோடி ஒதுக்கீடு

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென ஆங்கிலத்தில் பட்ஜெட் உரையை வாசிக்கும் நிதியமைச்சர் பி.டி.ஆர்!