தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று காலை சட்டமன்றத்தில் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார் என்பதும் பல்வேறு புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் ஆரம்பம் முதல் தமிழில் பட்ஜெட் உரையை வாசித்து கொண்டிருந்த பிடிஆர் பழனிவேல்ராஜன் திடீரென ஆங்கிலத்தில் பட்ஜெட் உரையை வாசித்தார். இதற்கு அவர் கொடுத்த விளக்கம் பின்வருமாறு:
மாநிலத்தின் நிதி நிலை குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றினால், தேசிய மற்றும் உலகலாளவிய பத்திரிகைகள் / முதலீட்டாளர்கள் அனைவருக்கும் எளிமையாக போய் சேரும் என்ற காரணத்திற்காக சில பத்திகளை மட்டும் ஆங்கிலத்தில் வாசிக்கின்றேன் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.