நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்பட்ட ரெட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வரும் நிலையில், சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் தற்போது தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது என்றும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகம் மற்றும் புதுவை இடையே இன்று கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்பட்ட ரெட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று அதி கனமழையும், 13 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு அடுத்த இரண்டு மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்.
இதனைத்தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆம், நவம்பர் 16 ஆம் தேதி மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
Edited By: Sugapriya Prakash