Publish Date: Fri, 11 Nov 2022 (16:08 IST)
Updated Date: Fri, 11 Nov 2022 (16:12 IST)
தமிழகம் வந்தார் பிரதமர் மோடி: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!
பிரதமர் மோடி சற்று முன் தமிழகம் வந்த நிலையில் அவரை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரவேற்றார்.
திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சற்றுமுன் பிரதமர் மோடி திண்டுக்கல் வந்தடைந்தார்
திண்டுக்கல்லில் பிரதமரை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன் பிறகு பிரதமர் மோடி காந்திகிராமம் செல்லும் வழியில் உள்ள பாஜக தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திப்பு கையசைத்தார்
பிரதமர் மோடியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களும் வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 5 எம்எல்ஏக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் ஓபிஎஸ் அவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன