Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் ’காப்பி ’அடிப்பதில் வெட்கப்படவில்லை : கமல்ஹாசன் ஓபன் டாக்

நான்  ’காப்பி ’அடிப்பதில் வெட்கப்படவில்லை : கமல்ஹாசன் ஓபன் டாக்
, சனி, 8 டிசம்பர் 2018 (14:21 IST)
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை புனரமைத்து கட்டித் தந்தது மாதிரியான நல்ல திட்டங்களை காப்பியடிப்பதில் வெட்கம் இல்லை என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் கிழக்கம்பள்ளம் என்ற பகுதியில் சிதிலமடைந்த வீடுகளை டுவெண்டி 20 ( கேரளா)  என்ற தன்னார்வ சேவை  அமைப்பு  புனரமைத்து கட்டித்தந்தது எல்லோரது கவனத்தையும் பெற்றது.
 
இதில் 37 வீடுகள் புனரமைக்கப்பட்டு பயனாளர்களுக்கு தரப்பட்டன. இந்த விழாவின் போது கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளர்களுக்கு சாவிகளை வழக்கினார். இது செய்திகளாகவும் வந்தது.
 
அதன் பின் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
டுவெண்டு 20 அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாபுஜேக்கபும் நானும் இணைந்து அரசியலில் புது மாற்றத்தை உருவாக்குவோம். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.
 
நான் இங்கு விருந்தினராக வந்தது இத்திட்டத்தை பற்றி தெரிந்து கொண்டு தமிழகத்திலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுபோன்று வீடுகளை புனரமைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
 
மக்களுக்கு நன்மைபயக்கும் நல்ல திட்டங்களை காப்பியடிப்பதில் எனக்கு வெட்கம் இல்லை. அரசியல் என்பது அர்பணிப்பு : அது பணத்துக்கானது அல்ல, மாறாக மக்களுக்கானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் நோயாளிகள் பீதி…