Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் சென்ற விமானத்தை தடுத்து நிறுத்திய உடும்பு

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (09:52 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று சென்றிருந்தார். நிகழ்ச்சிகள் முடிவடைந்து அவர் மீண்டும் தனி விமானம் மூலம் சென்னை செல்ல சேலம் விமானம் நிலையம் வந்தார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் அந்த தனி விமானம் மூலம் சேலம் விமான நிலையத்தில் இருந்த ரன்வேயில் இருந்து புறப்பட ஆயத்தமானது. ஆனாலும் அந்த தனி விமானம் சிறிது நேரம் ரன்வேயிலேயே நின்றது. இதனால் குழப்பம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக ஜீப்பில் சென்று விமானம் அருகே சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது விமானத்தின் முன்பாக உடும்பு ஒன்று ஊர்ந்து வந்ததை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் மூலம் உடும்பு விரட்டியடிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து விமானம் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்பூர் வன்முறைக்கு காரணமான முக்கிய குற்றவாளியின் வீடு இடிப்பு: பெரும் பரபரப்பு..!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமரை சந்திக்கும் தமிழக எம்பிக்கள் குழு..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பெண் குழந்தை பிறந்தால் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்த வேண்டும்: கலெக்டர் உத்தரவு..!

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments