Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரைமுருகனால் மதிமுகவினர் காயம்: வைகோ வருத்தம்

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (09:37 IST)
துரைமுருகன் கூறிய கருத்தால் மதிமுகவினர் காயமடைந்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருத்தத்துடன் தெரிவித்துள்ள்ளார்.

சமீபத்தில் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த திமுக பொருளாளர் துரைமுருகன், காங்கிரஸ், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் உள்பட எந்த கட்சியும் திமுகவுடன் இப்போதைக்கு தேர்தல் கூட்டணியில் இல்லை என்றும் தேர்தல் அறிவிப்புக்கு பின் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைக்கு பின்னரே திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளது என்பது உறுதியாகும் என்றும் தெரிவித்தார்.

இந்த பேட்டி மு.க.ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என்று சூளுரைத்த வைகோவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியிலும், திமுக கூட்டணியிலும் இடமின்றி மதிமுக தனித்து விடப்படுமோ என்ற அச்சம் வைகோவுக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய வைகோ, 'கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய பதில், மதிமுகவினரை காயமடைய செய்துள்ளது என்றும் . மேலும் துரைமுருகன் அவரது பதிலை கூறிவிட்டார், ஸ்டாலின் அவரது முடிவை சொல்லட்டும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments