Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோண்ட தோண்ட சிலைகள்: அம்பலமாகும் ரன்வீர்ஷாவின் ரகசியங்கள்

Advertiesment
தோண்ட தோண்ட சிலைகள்: அம்பலமாகும் ரன்வீர்ஷாவின் ரகசியங்கள்
, ஞாயிறு, 4 நவம்பர் 2018 (11:42 IST)
கிண்டியில் உள்ள ரன்வீர்ஷாவின் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் சிலை கடத்தல் சிறப்புப் பிரிவினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
 
சமீபத்தில் சிலைக்கடத்தல் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிபதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான வீட்டில் சோதனை செய்தபோது விலைமதிப்புள்ள பழங்கால கோவில் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. 
 
மேலும் அவரது பண்ணை வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி ரெய்டில் எராளமான சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரை இவரிடம் இருந்து 247 சிலைகள் கண்டுபிடிக்கப்படிருப்பதாக தெரிகிறது. ஒரு கோவிலையே மொட்டை அடித்தது போல் ஏராளமான சிலைகள், தூண்கள் மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
webdunia
இந்நிலையில் இன்று ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு, கிண்டியில் உள்ள ரன்வீர்ஷாவின் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் விழாக்காலங்களில்  தேர்களில் பயன்படுத்தும்  கருடன், நந்தி உள்ளிட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சின்னத்திரை நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்