Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பையில் போலீஸ் முன்பு ஆடையை கழற்றி வீசிய மாடல் அழகி

Advertiesment
மும்பையில் போலீஸ் முன்பு ஆடையை கழற்றி வீசிய மாடல் அழகி
, வியாழன், 1 நவம்பர் 2018 (15:19 IST)
இரவு நேரத்தில் போலீஸார் ஸ்டேசனுக்கு கூப்பிட்டதால், ஆத்திரமடைந்த  மாடல் அழகி மேஹா ஷர்மா, ஆடையை கழற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் நேற்று முன் தினம் மாடல் மேஹா ஷர்மா என்பவர் இரவு 1 மணி அளவில் சிகரெட் வாங்குவதற்காக தனியாக சென்றுள்ளார். அப்போது அடுக்குமாடியில் பாதுகாப்புக்கு இருந்த  காவலாளிகள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். கோபமடைந்த மேஹா காவலாளி ஒருவரை அடித்துள்ளார்.
 
இதற்கிடையே காவலாளிகள் மீது மேஹா போலீஸாரிடம் புகராளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் காவலாளிக்கு சாதகமாக பேசியுள்ளனர். மேலும் மேஹாவை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். அச்சமயம் அதிகாலை 3 மணி என்பதால் தான் காலை காவல் நிலையம் வருவதாகவும், தற்போது தனது வீட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறு கேட்டுள்ளார்.
 
ஆனால் போலீஸார் மறுத்துள்ளனர். தொடர்ந்து மேஹா லிப்பிடில் நின்றப்படி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். ஆனால் லிப்டை செயல்படவிடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தினர். பல நிமிடங்களாக வாக்குவாதம் தொடர்ந்துக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த மேஹா ஆடையை கழற்றினார். ஆனாலும் போலீஸார் தடுத்து நிறுத்தியபடி இருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளிக்கு தியேட்டரிலும், வீட்டிலும் வெடிக்க இருக்கும் சர்கார்