Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாக்டர்கள் உயிரிழந்தால் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் – முதல்வர் பழனிசாமி

Advertiesment
டாக்டர்கள் உயிரிழந்தால் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் – முதல்வர் பழனிசாமி
, புதன், 22 ஏப்ரல் 2020 (17:10 IST)
தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் மருத்துவர்களை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில்,  கொரொனா தடுப்புக்காக பணியாற்றி வரும் மருத்துவத்துறை, போலீஸார், உள்ளாட்சித் துறை மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறைப்பணியாளர்களும் வைரஸால் உயிரிழக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி உதவியும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு  தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், கொரொனா தடுப்பு பணியிலுள்ள தனியார் மற்றும் அரசுத் துறையில் இருந்து உயிரிழப்பு நேர்ந்தால், அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அவர்களின் உடலை பாதுக்காப்புடன் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். கொரோனா தடுப்பு பணியில் உள்ள அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் இப்பணியில் உள்ள பிற துறை அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் இப்பணியில் ஈடுபட்டு உயிரிழக்க நேரிடும் தனியார் மற்றும் அரசு பணியாளர்களின் பணியை பாராட்டி அவர்களுக்கு உரிய விருதுகளும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக அரசை பாராட்டிய துணை குடியரசுத் தலைவர் !