இன்று முதல் ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் முகாம்களில் தங்கியுள்ள பணியாளர்களை பணிக்கு அனுப்புவது குறித்து மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது.
அதன்படி கொரோனா பாதிப்பால் விவசாய, கட்டிட பணிகள் போன்றவை நிறுத்தப்பட்டதால், இந்த துறைகளில் வேலை பார்த்த பல்வேறு மாநில தொழிலாளர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஹாட்ஸ்பாட்களாக அறியப்படாத மாவட்டங்களில் அவர்கள் பணி புரிந்திருந்தால் அவர்களது பணியை தொடர அரசு சகல விதத்திலும் அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்கள் பயணிக்கும் பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தருவதோடு, சமூக இடைவெளி பேணுதலையும் உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த அனுமதியானது மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்ளே மட்டும் செல்லுபடியாக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.