Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக+பாஜக கூட்டணி என்றால் 40க்கு 40 வெற்றியா? தந்தி டிவி கருத்துக்கணிப்பு..!

Advertiesment
admk aliance

Siva

, செவ்வாய், 5 மார்ச் 2024 (08:51 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை குறித்த கருத்து கணிப்பை தந்தி டிவி வெளியிட்டுள்ள நிலையில் அதில் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணிகளின் தனித்தனி வாக்கு சதவீதத்தை கூட்டினால் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. 
 
பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக அதிரடியாக அறிவித்த நிலையில் தமிழக அரசியல் தலைமை முற்றிலும் மாறிவிட்டது. திமுக ஆட்சி மீது அதிருப்தி இருப்பதால் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி திடீரென இரண்டாக உடைந்தது திமுகவுக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது. 
 
அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாக மற்றும் சில சிறிய கட்சிகள் ஒன்று சேர்ந்தது திமுக கூட்டணியை எதிர்த்தால் கண்டிப்பாக பாதிக்கு பாதி வெற்றி இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்து இருந்தனர். ஆனால் அந்த கணிப்பை பொய்யாக்கும் வகையில் அதிமுக பாஜக பிரிந்துவிட்ட நிலையில் தந்தி டிவி தற்போது எடுத்துள்ள கருத்துக்கணிப்பில் திமுகவுக்கு 45 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் அதிமுக கூட்டணிக்கு 33 சதவீதமும் பாஜக கூட்டணிக்கு 13 சதவீதமும் கிடைக்கும் என்றும் கணித்துள்ளது. 
 
அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை சேர்த்தால் 46 சதவீதம் வருவதால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அந்த கூட்டணி அமையாததால் மீண்டும் திமுக கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் கல்லூரியின் 33வது விளையாட்டு விழா