Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வந்தே பாரத் ரயில்களை வெளிநாட்டு நிறுவனம் உருவாக்குகிறதா? ஐ.சி.எப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வந்தே பாரத் ரயில்களை வெளிநாட்டு நிறுவனம் உருவாக்குகிறதா?  ஐ.சி.எப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
, வெள்ளி, 27 அக்டோபர் 2023 (20:48 IST)
தற்போது நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி கொண்டிருக்கின்ற நிலையில் அந்த ரயில்களை சென்னையில் உள்ள ஐசிஎப் நிறுவனம்தான் குறைந்து செலவில் வடிவமைத்து கொடுத்தது. ஆனால் புதிய வந்தே பாரத ரயில்களை  உருவாக்குவதற்கு வெளிநாட்டு நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் படுக்கை வசதி கொண்ட புதிய வந்தே பாரத் ரயில்களை உருவாக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ரயில்வே அமைச்சகம் ஒப்பந்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐ.சி.எப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தற்போது ஓடும் வந்தே பாரத் ரயில்களை குறைந்த செலவில் ஐ.சி.எப். உருவாக்கிய நிலையில், புதிய ரயில்களை தயாரிக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ஏன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்? என ஐ.சி.எப் ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
மின்சாரம், கேஸ். தண்ணீர் போன்றவற்றை வெளிநாட்டு நிறுவனத்திற்கு ஐ.சி.எப் இலவசமாக வழங்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உண்மையை பேசாத அனைத்து நாடுகளும் ஊமை பிசாசுகள்- துருக்கி அதிபர் எர்டோகன்