Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமைச்சரின் ஊழல்கள் குறித்து தினமும் ஒரு பட்டியலை வெளியிடுவேன்- செந்தில்பாலாஜி

அமைச்சரின் ஊழல்கள் குறித்து தினமும் ஒரு பட்டியலை  வெளியிடுவேன்-  செந்தில்பாலாஜி
, ஞாயிறு, 14 மார்ச் 2021 (00:12 IST)
கரூர் தொகுதியில் ஆளுங்கட்சி அமைச்சரின் ஊழல்கள் குறித்து தினமும் ஒரு பட்டியலை ஆதாரத்துடன் வெளியிடுவேன் என கரூரில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி பேட்டிளித்தார்.

கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சிகளின்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் எம்பி ஜோதிமணி,   திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கே சி பழனிச்சாமி,  நெசவாளர் அணி மாநில தலைவர்  நன்னியூர் ராஜேந்திரன்,  காங்கிரஸ் மாவட்ட தலைவர் சின்னசாமி,  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர், வேட்பாளர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,  கரூர் தொகுதியில் ஆளுங்கட்சி அமைச்சர் 12 நிறுவனங்களை நடத்தி அதில் வருமானம் வந்ததாக கூறுகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வருமானம் வந்தது என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயாராக இருக்கிறாரா என கேள்வி எழுப்பிய அவர்,  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வருமானத்தை விட பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு தற்போது சொத்துக்களைச் சேர்த்துள்ளார். அவர் சேர்த்த சொத்து பட்டியல் அடங்கிய பத்திரங்களை தினமும்  ஒவ்வொன்றாக நாங்கள் வெளியிட்டு மக்களிடம் அம்பலபடுத்துவோம். அமைச்சர் தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் சொத்துக்களை மலைபோல வாங்கி குவித்துள்ளார். தமிழக அரசின் கடன் தொகை 5 லட்சம் கோடியாக உயர காரணம் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் வாங்கிக் குவித்துள்ள  சொத்துக்களின் மதிப்பு இந்த அளவுக்கு உள்ளது போக்குவரத்து துறையில் 1,000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 4 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து மக்களால் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டார் தம்பிதுரை. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை இப்போது வந்து தேர்தலுக்காக ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார். எம்பி தேர்தலின் போது அவரது சொத்துக்கள் குறித்து கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் குறித்து பட்டியல் வெளியிட்டும் இதுவரை அவர் பதில் சொல்லவில்லை. தம்பித்துரையால் கரூர் தொகுதிக்கு எந்த திட்டமும் கொண்டு வர முடியவில்லை. கரூர் தொகுதிக்கு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டால் 5 ஆண்டுகளில் 2 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை கொண்டு வருவேன். துணை சபாநாயகர் பதவியை வைத்துக்கொண்டு எதையுமே செய்யாமல் இருந்தவர்தான் இந்த தம்பிதுரை என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்களின் எதிர்காலம் விற்பனைக்கல்ல - கமல்ஹாசன்