Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் தந்தையை கொல்ல திட்டம் தீட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாணவி மனு

என் தந்தையை கொல்ல திட்டம் தீட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாணவி மனு
, வியாழன், 14 மே 2020 (23:07 IST)

என் தந்தையை கொல்ல திட்டம் தீட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாணவி மனு

 

வழக்கினை வாபஸ் வாங்கா விட்டால் என் தந்தையை கொல்ல திட்டம் தீட்டுபவர் மீது முதல்வர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வருக்கு 9 ம் வகுப்பு பள்ளி மாணவி மனு கொடுத்துள்ளார்.

கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியினை சார்ந்தவர் ராஜேந்திரன், இவரது மனைவியை, காவல்துறையினை சார்ந்த சரவணன் என்பவர் அபகரித்துக் கொண்டதோடு, அவரது பணம் ரூ 60 லட்சமும், 80 பவுன் நகைகளும் அபகரித்துக் கொண்டதாக கூறப்படும் நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே பெரும் சர்ச்சை, கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், உடற்கல்வித்துறை இயக்குநரின் மூத்த மகள் ( பெயர் மறைக்கப்பட்டுள்ளது) 8 ம் வகுப்பு முடித்து, தற்போது 9 ம் வகுப்பு செல்ல உள்ளார். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மனம் திறந்த மடல் ஒன்றினை எழுதியுள்ளார்.

அதில் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி ஐயா., அவர்களுக்கு, வணக்கம் சிறப்பான பல்வேறு நல்ல திட்டங்களை தீட்டி, எந்த ஒரு நடிகரும் இல்லை, விவசாயியான ஒருவர் முதன்முறையில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ள பெருமை அனைவரும் அறிந்ததே, இந்நிலையில் பெண் குழந்தைகளுக்கும் சிறப்பான பல நல்ல திட்டங்களை தீட்டி வரும் நிலையில், என்னை போன்ற மாணவிகள், அம்மா இல்லாமல், கஷ்டப்பட்டு வருபவர்களுக்கும், தந்தை மற்றும் பாட்டியின் அரவணைப்பில், வளர்ந்து வருகின்றேன், சேலம் மாவட்டம், மேட்டூர் காவல்நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றி வரும் சரவணன் என்பவரது கட்டுப்பாட்டில் உள்ள எனது தாயை மீட்க வேண்டுமென்றும், அதே நேரத்தில் என்னை பாலியல் தொந்தரவு செய்த இவர் மீது, ஏற்கனவே, அனைத்து மகளிர் காவல்நிலையம் சூரமங்கலம் சேலம் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் 2019 ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 22 ம் தேதி வழக்கு பதியப்பட்டும், அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் போலீஸ் சரவணன் மனைவி கீதா என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.

 இவர், சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள ஹோலிகிராஸ் பள்ளியின் பின்புறம் உள்ள செல்வாநகரில் வசித்து வருகின்றார். நான் எனது பாட்டி, எனது தந்தை, எனது சித்தப்பா ஆகியோர்கள் அங்கே சென்று என் அம்மாவை விட்டுத்தருமாறும் அவருக்கு ஒன்றும் தெரியாது உங்களுக்கு உங்கள் மனைவி, மகன்கள் எவ்வளவு முக்கியமோ, அப்படி தான் எனக்கும் என் குடும்பம் எனது அம்மா மற்றும் எனது தங்கை ஆகியோர் முக்கியம் என்று கூறியதற்கு மிரட்டி அனுப்பினார். ஆனால், தற்போது, சேலம் மாவட்டம், மேட்டுப்பாட்டு பகுதியை அடுத்த தாதனூர் என்ற இடத்தில், பெட்ரோல் பங்கின் பின்புறம் தேவாங்கர் காலனியில் 25 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து புதிதாக வீடு ஒன்றினை எனது தாயினை மிரட்டி, போலீஸ்காரர் சரவணன் வாங்கியுள்ளார்.

.அங்கு, இருவரும் அவ்வப்போது வசித்தும் வருகின்றனர். இதை நானும் எனது குடும்பமும் அங்கு சென்று விசாரித்த போது தெரியவந்தது. இந்நிலையில் போலீஸ் சரவணன் மனைவி கீதா, பணத்திற்கு ஆசைப்பட்டு, தனது கணவனை தண்டிக்க வேண்டிய மனைவி, அப்படியே பேசாமல் இருக்கின்றார். அதுமட்டுமில்லாமல் போலீஸ் சரவணன், முதல்வரே எனது மாவட்டம் தான், முதல்வரை எனக்கு நன்கு தெரியும் என்றும் கூறி மிரட்டி வருகின்றார். அதுமட்டுமில்லாமல், இவரை, காவல்துறையினரே இவரது செயலை கண்டு, அவருக்கு பனீஸ்மெண்ட் கொடுக்கும் வகையில், திருநெல்வேலி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் அங்கு செல்லாமல் என் அம்மாவுடன் ஊர் சுற்றி வருகின்றார். அனைவருக்கும் குடும்பம் உள்ளது, குழந்தைகள் உள்ளது. என் குடும்பத்தினையே சீரழித்து எனது அம்மாவை, எனது அப்பாவிடம் இருந்து பிரித்து விட்டார்.

அது மட்டுமில்லாமல், நீ ராஜேந்திரனை (எனது தந்தையை) விவாகரத்து செய்தால் நான் உன்னை (எனது அம்மாவை) திருமணம் செய்து கொள்வேன் என்றும் ஆசை வார்த்தை கூறியும், தனது கட்டுப்பாட்டில் தலைமைக்காவலர் சரவணன் வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் எனது தங்கையை வைத்தே, எனது தந்தை மீது பாலியல் வழக்கு பதிய திட்டம் தீட்டி, வழக்கும் இந்த வருடம் ஜனவரி மாதம் அதே சேலம் மாவட்டம் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதை எனது தந்தை அறிந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். நானும் எனது பாட்டி மற்றும் எனது உறவினர்கள் அவரை காப்பாற்றியுள்ளோம் ஆகையால், முதல்வர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களே, உங்கள் துறையினை சார்ந்த ஒரு காவலர் அதுவும், உங்களது சொந்த மாவட்டத்தில், அராஜக வழியில் செய்தும், ஒரு நல்ல குடும்பத்தினை முற்றிலுமாக கெடுத்துள்ள அவரது மீது துறை ரீதியாக நீங்கள் நடவடிக்கை மேலும் துரித படுத்த வேண்டுமென்றும் என்று ஒரு இன்லாண்ட் லெட்டர் ஒன்றில் அனுப்பியுள்ளார். இது தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், இளம் சீறார்களை சீரழிக்கும் கயவர்கள் உள்ள நிலையில், பெண் சீறார்களை காக்க வேண்டியும், அவர்களது வாழ்க்கை தாய் தந்தை அரவணைப்பில் தான் நன்கு அமையும் என்றும், அதில் தாய் ஒரு புறம் பிரிந்தும், தந்தை ஒரு புறம் பிரிந்தும் அதிலும் தாயினை பகடைக்காயாக மாற்றும் ஒரு காவலரின் எண்ணம் குறித்து அந்த 9 ம் வகுப்பு படிக்கும் மாணவியின் கடிதத்தில் எழுதியுள்ள வாசகங்கள் அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைக்கும் வகையில் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகம் முழுவதும் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு