அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் – அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு

சனி, 21 செப்டம்பர் 2019 (20:41 IST)
அடுத்த கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படுமென கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “தனியார் பள்ளி கட்டிடங்கள் 2 வருடத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படும். அதேபோல் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விரைவில் இரண்டாவது கல்வி தொலைக்காட்சி கொண்டுவர இருக்கிறோம்.

மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்கிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 'கீழடி அகழ்வாய்வில் மதம், கடவுள் சார்ந்து எதுவும் கிடைக்கவில்லை'