தமிழ்நாடு அமைச்சர் முத்துசாமி, நேற்று, காலையில் மதுகுடிப்பவர்களை என்று சொல்வதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
போதைப் பொருட்களே இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் முக. ஸ்டாலின் பேசி வரும் நிலையில், அமைச்சர்கள் மதுப்பிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.முரண்பாடான கருத்துக்களை தவிர்த்து, போதையில்லாத மாநிலமாக்க தமிழ்நாடு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மது பிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்த கருத்துக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காலையில் மதுகுடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொன்னால் எனக்குக் கோபம் வரும் என அமைச்சர் முத்துசாமி கூறியது நகைப்புக்குரியதாக உள்ளது.
மக்களுக்குப் பொறுப்புடன் பதில் அளிக்கு வேண்டிய அமைச்சரே இவ்வாறு பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.