விமானியாக விருப்பம் தெரிவித்த நிரஞ்சன்
விமானியாக விருப்பம் தெரிவித்த நிரஞ்சன்
பத்தாம் வகுப்பு தேர்வபு எழுதிய இரண்டாம் இடம் பிடித்த மாணவர் நிரஞ்சன் விமானியாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 10.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியானது.
இதில், சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலை பள்ளியை சேர்ந்த நிரஞ்சன் என்ற மாணவன் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
இந்த வெற்றி குறித்து, மாணவன் நிரஞ்சன் கூறுகையில், எனக்கு மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது ஆசிரிய பெருமக்களுக்கு நன்றி. எதிர்காலத்தில், விமானியாக வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றார்.