Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலினை நெஞ்சாரப் பாராட்டுகிறேன்- திருமாவளவன் டுவீட்

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (17:54 IST)
நீட்விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி இந்நாளில் புதிய வரலாறு படைத்துள்ள மாண்புமிகு முதல்வர் ஸ்டாலினை நெஞ்சாரப் பாராட்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார் வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன்.

நீட் தேர்வு ரத்து குறித்த மசோதாவை ஆளு நர் ரவி அவர்கள்  சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிவிட்டார். இந்நிலையில் ஆளு நரைத் திரும்ப பெற வேண்டும் என ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் கருத்துத் தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை 2022- ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கரி 8 ஆம்  நாள் செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு  அவர்கள் கூட்டியுள்ளதாக  செயலாளர் கடந்த வாரம்  ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதன்படி இன்று காலை சட்டமன்றத்தில் நீட்  விலக்கு மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு வி.சி.க., தலைவர் தொல். திருமாவளன் தனது டிவிட்டர் பக்கத்தில்,இந்தியாவுக்கே முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டு நீட்விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி இந்நாளில் புதிய வரலாறு படைத்துள்ள மாண்புமிகு முதல்வர் @mkstalinஅவர்களின் துணிவையும் செயல்திறனையும் நெஞ்சாரப் பாராட்டுகிறோம். இது மொழிவழி தேசியத்துக்கான  சமூகநீதிப் போராட்டமே ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments