தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா இன்று நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்றே ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுனர் ஆர்.என்.ரவி அதை மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்படுகிறது. மருத்துவ மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.பாஜக தவிர அனைத்து கட்சிகளும் மசோதாவுக்கு ஆதரவு அளித்த நிலையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா இன்றே ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.