Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு

Advertiesment
அசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு
, ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (14:15 IST)
சின்மயியின் பாலியல் புகாருக்கு வீடியோ மூலம் பதிலளித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
 
தமிழ் சினிமாவின்  பிரபல பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
webdunia
 
இதுகுறித்து டிவிட்டரில் பதிலளித்த வைரமுத்து “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்’ என கூறியிருந்தார்.
 
ஆனாலும் தொடர்ந்து வைரமுத்து மீது ஏராளமான பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார் சின்மயி. கடந்த ஒரு வாரமாக மவுனம் காத்த வைரமுத்து, ஒரு மறுப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
 
நான் கெட்டவனா? அல்லது நல்லவனா? என்பதை இப்பொழுது யாரும் முடிவு செய்யாதீர்கள்.  என் மீது புகார் கூறுபவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள். நீதிமன்றம் சொல்லட்டும் நான் எப்படிபட்டவன் என்று. ஒரு வாரமாக மூத்த வழக்கறிஞர்களோடு ஆழ்ந்து கலந்தாலோசித்தேன்.
 
ஏராளமான அசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன். உள்நோக்கத்துடனே என் மீது குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது. அது முழுக்க முழுக்க பொய். இதனை சட்ட ரீதியாக சந்திக்க தயார் என ஆவேசமாக பேசியிருக்கிறார் வைரமுத்து.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் ராஜினாமா?