ஜாலிக்காக செய்தது விபரீதத்தில் முடிந்தது: விசாரணையின்போது கதறியழுத ராஜகோபாலன்!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (14:23 IST)
ஜாலிக்காக மாணவிகளிடம் சில்மிஷம் செய்தது விபரீதமாக முடிந்து விட்டது என போலீஸ் விசாரணையின்போது ஆசிரியர் ராஜகோபாலன் கதறியழுததாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் விசாரணையின்போது ஜாலியாகத்தான் மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாகவும் அது இந்த அளவுக்கு விபரீதத்தில் முடியும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் வாக்கு மூலத்தின் போது ராஜகோபாலன் கதறி அழுததாக கூறப்படுகிறது 
 
நேற்று மாலை கைது செய்யப்பட்ட ராஜகோபாலனிடம் விடிய விடிய போலீசார் விசாரணை செய்ததாகவும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராஜகோபால் மீது மாணவிகள் பலமுறை புகார் செய்தும் பள்ளி நிர்வாகம் ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளதாக இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மேலும் சில ஆசிரியர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உச்சம் சென்ற வெள்ளி விலையில் திடீர் சரிவு.. தங்கத்தின் நிலவரம் என்ன?

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? டிசம்பர் 24-ல் அறிவிப்பு: ஓபிஎஸ் தகவல்; பாஜக சமரசம் எடுபடவில்லையா?

கேரள நடிகை பாலியல் வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு.. எத்தனை ஆண்டு சிறை?

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கிஸ் முகமதி கைது: ஈரான் அரசு அதிரடி..!

16% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழகம் முதலிடம்: ரிசர்வ் வங்கி தகவல்

அடுத்த கட்டுரையில்