மற்றவர்களைப் போல என்னால் பொய் சொல்ல முடியாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்விட்டரில் பொதுமக்களின் கேள்விக்கு அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
கடந்த மே 1ஆம் தேதி அன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் பொதுமக்கள் கேள்விக்கு பதில் அளித்தார். இந்நிலையில், நேற்றும், நேற்று முன் தினமும் மீண்டும் பொதுமக்கள் கேள்விக்கு பதில் அளிப்பதாக அறிவித்தார்.
இதையடுத்து பலரும் அவரிடம் கேள்விக் கணைகளை தொடுத்தனர். அதில் சிலவற்றை கீழே காணலாம்:
கேள்வி: நீங்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றாள் அப்துல் கலாம் பிறந்த நாள் மாணவர்கள் தினமாக அறிவிக்கப்படுமா?
கேப்டன்: இது குறித்து பிரதமரிடம் ஏற்கனவே முறையிட்டு இருக்கிறோம்.
கேள்வி: நீங்கள் ஆட்சி அமைத்தால் சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா?
பதில்: ஆமாம்.
கேள்வி: பெட்ரோல் விலையை எவ்வாறு குறைப்பது என்று தயவுகூர்ந்து விவரிக்க முடியுமா கேப்டன்?
பதில்: இது நடக்கக்கூடிய ஒன்றுதான். இதற்கான எல்லா திட்டங்களையும் நான் வைத்துள்ளேன்.
கேள்வி: இக்கால இளைஞர்களுக்கு தாங்கள் கூற விரும்பும் அறிவுரை.
பதில்: நல்ல ஆட்சி கொண்டு வருவது உங்கள் கையில் உள்ளது.
கேள்வி: தங்கள் சொந்த தொகுதியான மதுரையில் போட்டியிடாமல் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் போட்டியிடுவது ஏன்?
பதில்: எல்லா தொகுதியும் என் தொகுதிதான்.
கேள்வி: கேப்டன் தயவுசெய்து மற்ற அரசியல்வாதிகளை போல் பொய் சொல்ல கற்றுகொள்ளுங்கள்
பதில்: முடியாது
இவ்வாறு கூறியுள்ளார்.