Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'கனிமொழியின் மன்னிப்பை ஏற்க நான் தயாராக இல்லை’ - நடிகை குஷ்பு

Advertiesment
'கனிமொழியின்  மன்னிப்பை ஏற்க நான் தயாராக இல்லை’ -  நடிகை குஷ்பு
, சனி, 29 அக்டோபர் 2022 (14:45 IST)
திமுக பேச்சாளளர் சாதிக் பேசிய  விவகாரத்தில், ‘’கடமைக்கு என்னிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழியின்  மன்னிப்பை ஏற்க நான் தயாராக இல்லை’’ என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக பேச்சாளர் சாதிக் என்பவர் பாஜகவில் உள்ள குஷ்பு, கவுதமி, நமீதா, காயத்ரி ஜெயராம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இந்த பேச்சுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்த குஷ்பு, ‘ஆண்கள் பெண்களை தவறாக பேசுவது அவர்கள் வளர்க்கப்பட்ட விதத்தை காட்டுகிறது அவர்கள் வளர்ந்த மோசமான சூழலை காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். இதுபோன்ற ஆண்கள் தங்களை கலைஞரை பின்பற்றுபவர்கள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இதுதான் புதிய திராவிட மாடலா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

 
இந்தக் டுவீட்டுக்கு கனிமொழி பதிலளித்த போது ஒரு பெண்ணாகவும் ஒரு மனிதனாகவும் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார் இதைச் செய்து இருந்தாலும் எந்த கட்சி சேர்ந்தவராக இருந்தாலும் இதை சகித்துக்கொள்ள முடியாது. நான் இதற்காக வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், கடமைக்கு என்னிடம் மன்னிப்பு கேட்டவரின் மன்னிப்பை ஏற்க நான் தயாராக இல்லை என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

அவர்கள் என்னை இழிவாகப் பேசவில்லை, அவர்களின் குடும்பப் பெண்களையே இழிவாகப் பேசுகிறார்கள். எனக்காக குரல் கொடுத்த கனிமொழியை நான் பாராட்டுகின்றேன்.  அவர் பெண்களின் கருத்த சுதந்திரத்திற்கு எப்போதும் ஆதவராக இருப்பவர்.  இந்த சம்பவத்தில், முதல்வர் ஸ்டாலின் எனக்காக பேச வேண்டும், அத்துடன்ம் இனிமேல் எந்தப் பெண்ணையும் அவர்கள் இப்படி பேசமாட்டார்கள் என்று உறுதியளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் விபத்துக்குள்ளான வந்தே பாரத் ரயில்: இம்முறை மோதியது காளை மேல்!