Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''கோவை தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளேன்'' - கமல்ஹாசன்

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (13:56 IST)
''கோவை தொகுதியில் எனக்கு பெரும் ஆதரவு இருப்பதால் மீண்டும் கோவை தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளேன்'' என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு  நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக கூட்டணியை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில் இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் I.N.D.I.A கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியும் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில் நாளை கோவையில் இந்த கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம்  இன்று  கோயம்புத்தூரில் நடைபெறுகிறது.

இதுகுறித்து இன்று கோவையில் கமல்ஹாசன் கூறியதாவது: '' கோவை தொகுதியில் எனக்கு பெரும் ஆதரவு இருப்பதால் மீண்டும் கோவை தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ''விக்ரம் படத்திற்கு கூட்டம் சேர்கிறது என்றால் மக்கள் நீதி மய்யத்திற்கு கூட்டம் சேராதா'' என்று கூறினார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில்,  கோவையில் போட்டியிட்டு, கமல்ஹாசன் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments