Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவி இறந்த மறுநாள் கணவரும் மரணம்.. மரணத்திலும் பிரியாத 67 வருட தம்பதிகள்..!

Advertiesment
மனைவி இறந்த மறுநாள் கணவரும் மரணம்.. மரணத்திலும் பிரியாத 67 வருட தம்பதிகள்..!

Siva

, செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (09:04 IST)
மதுரை அருகே 80 வயது மூதாட்டி பிப்ரவரி 8ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிர் இழந்த நிலையில் அவரது கணவர் 9ஆம் தேதி மறுநாளை உயிரிழந்தது இறப்பிலும் இணைபிரியாத தம்பதிகளாக உள்ளனர் என்பதை காட்டுகிறது என அந்த பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
மதுரை மாவட்டம் கருப்பாயூரணி என்ற பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி வீராயி என்பவர், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பிப்ரவரி 8ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவால் அவரது கணவர் முத்து அம்பலம் மிகுந்த சோகத்தில் இருந்த நிலையில் மறுநாள் அவர் தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது.
 
67 ஆண்டுகள் கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்த நிலையில் இறப்பிலும்  பிரியாமல் அடுத்தடுத்த நாட்களில்  உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை.. தனித்து போட்டி: மே.வ.முதல்வர் மம்தா பானர்ஜி..!