Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியாக இருந்த மனைவியைக் கொலை செய்த கணவன் - சந்தேகத்தால் சீரழிந்த குடும்பம் !

Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (08:27 IST)
மனைவியின் நடத்தையின் மேல் சந்தேகம் கொண்டிருந்த கணவன் அவரது தாய் வீட்டுக்கு சென்று சுத்தியலால் தாக்கிக் கொலை செய்த சமபவம் நடந்துள்ளது.

சென்னை பூந்தமல்லிக்கு அருகில் உள்ள காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த தம்பதிகள் கிட்டப்பன் மற்றும் சுமதி. இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் புயலாக வீசியுள்ளது சந்தேகம் எனும் புயல். கிட்டப்பனுக்கு சுமதியின் நடத்தை மேல் சந்தேகம் எழுந்ததால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இதனால் சுமதி கோபித்துக்கொண்டு குழந்தைகளோடு கடந்த 10 மாதங்களாக தனது தாயாரின் வீட்டில் வாழ்கிறார். சுமதி, தனது கணவர் மேல் அளித்த புகார் ஒன்றும் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இதையடுத்து நேற்று காலை சுமதியின் தாயார் வீட்டுக்கு சென்ற கிட்டப்பன் அங்கும் சுமதியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாததால் அவர்களின் வாக்குவாதம்  சண்டையாக முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் கோபமான கிட்டப்பன் சுத்தியலால் சுமதியின் தலையில் தாக்கியுள்ளார். பின்னர் அவரது கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

தகவலறிந்த போலீஸார் வந்து சுமதியின் உடலைக் கைப்பற்றியுள்ளனர். கொலை செய்த கிட்டப்பன் பூந்தமல்லி போலிஸ் ஸ்டேஷனில் சரணடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments