நள்ளிரவில் தன் வீட்டுக்கே கூலிப்படையை அனுப்பிய நபர் – பிறகு நடந்த விபரீதம் !

Webdunia
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (12:08 IST)
சொத்தைத் தன் பேரில் மாற்றிக் கொடுக்க மறுத்த மனைவியைக் கூலிப்படை அனுப்பி கொலை செய்துள்ளார் மதுரையைச் சேர்ந்த குமரகுரு.

மதுரையில் பாத்திரக்கடை வைத்திருப்பவர் குமரகுரு. இவர் மனைவி லாவண்யா. சில தினங்களுக்கு நள்ளிரவில் லாவண்யாவை சிலர் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்தனர். இது சம்மந்தமாக போலீஸார் நடத்திய விசாரணையில் லாவண்யாவின் வீடருகே இருந்த சிசிடிவி கேமராக்கள் சோதனை செய்தபோது அவை அன்று மட்டும் செயல்படாமல் இருந்தது சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

மேலும் லாவண்யாவின் வீட்டுக் கதவு உடைக்கப்படாமல் கொலையாளிகள் உள்ளே நுழைந்திருப்பதால் போலிஸாரின் கவனம் லாவண்யாவின் கணவர் குமரகுரு மேல் திரும்பியது. அவரைக் கைது செய்து விசாரணை செய்ய, லாவண்யாவைக்  கூலிப்படை அனுப்பி கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். ’குமரகுரு ஆடம்பர செலவுகள் செய்து சொத்துகளை விற்பதால் அவரது தந்தை பாதி சொத்தை தனது மருமகள் லாவன்யா பேரில் எழுதி வைத்துள்ளார். இதையடுத்து குமரகுரு, லாவண்யாவை சொத்தை மாற்றி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுக்கவே தனது நண்பர்கள் மூலம் கூலிப்படையை ஏவி லாவண்யாவைக் கொலை செய்துள்ளார்.

இதையடுத்து கூலிப்படையைச் சேர்ந்த இருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments