Publish Date: Tue, 05 Jan 2021 (13:43 IST)
Updated Date: Tue, 05 Jan 2021 (13:45 IST)
கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் வரலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதால் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கோழி மற்றும் வாத்து கொண்டு வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ”கேரளாவில் பரவி வரும் பறவைக்காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. மழைக்காலம் என்பதால் டெங்கு பரவும் அபாயம் உள்ளதால் அது தொடர்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.