Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனித நேயம்! ரூ. 69 லட்சம் பணத்தை ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்..

Advertiesment
மனித நேயம்! ரூ. 69  லட்சம் பணத்தை ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்..
, ஞாயிறு, 16 ஜூன் 2019 (11:45 IST)
சென்னை மாதவரம் பகுதியில் செட்டியார் என்பவர் இரும்பு வியாபாரம் செய்துவந்தார். அவர் தன்னிடம் பணியாற்றிவந்த ஊழியர்களை வேலூர் மாவட்டத்திற்கு அனுப்பி, அங்கிருக்கும் இரும்புக் கடைகளில் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகையை வசூலித்து வரும்படி கூறியுள்ளார்.
இதனையடுத்து செட்டியாரின் உத்தரவை ஏற்று வேலூர் சென்ற ஊழியர்கள், அங்கு குறிப்பிட்ட கடைகளில் வசூலித்த ரூ 69 லட்சம் பணத்துடன் காரில் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
 
அப்போது காஞ்சிபுரம் அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் காரின் டயர் வெடித்து சாலையிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் காரில் பயணம் செய்த முரளி என்பவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.மற்ற இருவர் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர்.
 
பின்னர் அருகில் இருந்த மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர்.  விரைந்து வந்த 108 ஊழியர்கள் விஜயகுமார் மற்றும் ஓட்டுநர் சந்தானம்  இருவருக்கும் சிகிச்சை அளித்து காஞ்சிபுரம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
விபத்தான காரில் சிதறிக்கிடந்த ரூ. 69 லட்சம் பணத்த மீட்டு காஞ்சிபுரம் தாலுக போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 
 
ஆம்புலன்ஸ் ஒட்டுநர்களில்நேர்மையை பார்த்து போலீஸார் பாராட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலியல் வல்லுறவுக்குள்ளான மகள்… கறிவிருந்து கேட்கும் ஊர்மக்கள் – தந்தையின் கையறு நிலை !