Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எடப்பாடி பழனிசாமி கீழ்தரமாக பேசி இருக்கிறார் – ஸ்டாலினுக்கு சப்போர்ட்டாக களமிறங்கிய கனிமொழி

Advertiesment
எடப்பாடி பழனிசாமி கீழ்தரமாக பேசி இருக்கிறார் – ஸ்டாலினுக்கு சப்போர்ட்டாக களமிறங்கிய கனிமொழி
, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (14:02 IST)
ஸ்டாலின், சிதம்பரம் ஆகியோரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து பேசியதற்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளார் தூத்துக்குடி எம்.பி கனிமொழி.

ஸ்டாலின் விளம்பரத்திற்காக சீன் காட்டுகிறார் என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு பதிலளித்த கனிமொழி “திமுக தலைவர் ஸ்டாலின் எந்த விளம்பரத்தையும் தேட வேண்டிய அவசியம் இல்லை. அவர் தனது கருத்தை கூறி இருக்கிறார். நீலகிரியில் ஏற்பட்ட பாதிப்புகளை காண முதல்வர் செல்லாதது ஏன்?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி திமுக வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ப.சிதம்பரத்தை பூமிக்கே பாரம் என முதல்வர் பேசியது குறித்து பேசிய கனிமொழி “ப.சிதம்பரம் கருத்துக்கு முதல்வர் மிகவும் கீழ்தரமாக பேசியுள்ளார். அதுகுறித்து பதில் சொல்ல முடியாது” என மறுத்துவிட்டார்.

மேலும் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு சர்வதிகாரமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீரில் அமர்ந்து சென்ற திடீர் மனிதன்: அலாவுதினாக இருக்குமா என்று சந்தேகம்