Publish Date: Wed, 12 Jan 2022 (18:11 IST)
Updated Date: Wed, 12 Jan 2022 (18:12 IST)
பொய் வழக்குப் போட்டு துன்புறுத்திய காவலர்களுக்கு ரூபாய் 4.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் உள்பட 8 போலீசார் சாந்த குமார் என்பவர் மீது பொய் வழக்கு போட்டதாக மனித உரிமை ஆணையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் முடிவில் சாந்த குமார் என்பவர் மீது பொய் வழக்கு போட்டு துன்புறுத்திய பெரம்பலூர் காவல் ஆய்வாளர் உட்பட 8 பேருக்கு 4.50 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
மேலும் இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது