ஏற்கனவே வேங்கை வயல் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மதுரை அருகே சோழவந்தான் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலை நீர் தேக்க தொட்டியிலும் மலம் கலக்கப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள அமைச்சியாபுரம் என்ற கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், "14 வயது சிறுவனின் தவறான செயல்" எனக் கூறப்பட்டுள்ளது. "சிறுவன் தவறுதலாக விளையாட்டாக தொட்டியில் மலம் கலந்ததாகவும் தெரியவந்துள்ளது. சிறுவனிடம் தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு பூட்டு போடும் பணிகள் நடைபெற்று வருகிறது" என்று மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
இருப்பினும், இந்த விளக்கத்தையும் மீறி அந்தப் பகுதியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.