Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு விவகாரம்: மனித உரிமை ஆணையம் எடுத்த அதிரடி நடவடிக்கை

Webdunia
செவ்வாய், 8 மே 2018 (09:46 IST)
கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற நீட் தேர்வில் ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு அலைக்கழிக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தேர்வின்போது மாணவர் ஒருவரின் தந்தையும், மாணவி ஒருவரின் தந்தையும் மரணம் அடைந்தனர்.
 
இந்த நிலையில் நீட் தேர்வுக்காக மாணவ, மாணவிகள் வெளிமாநிலங்களுக்கு அலைக்ககழிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு சிபிஎஸ்இ மற்றும்  தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 
நீட் தேர்வின்போது மாணவ, மாணவிகள் சந்தித்த சிரமங்கள் குறித்து, ஊடங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த நோட்டீஸ்களை தாமாகவே முன்வந்து அனுப்பியுள்ளாதாக தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
 
வெளிமாநிலத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டதால் மாணவர்களும் பெற்றோர்களும் மன உளைச்சலை அடைந்ததாகவும், இதனால் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளதாகவும், இதுவொரு மனித உரிமை மீறல் என்றும் மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் போதிய தேர்வு மையங்கள் அமைக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள ஆணையம், இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments