Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 1500க்கும் அதிகமான ஜாக்டோஜியோ அமைப்பினர் கைது

Webdunia
செவ்வாய், 8 மே 2018 (08:23 IST)
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அமைப்பான ஜாக்டோஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை முதல் 1500க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் போராட்டம் நடத்தவுள்ளதாக ஜாக்டோஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஜாக்டோஜியோ அமைப்பினர் கோயம்பேடு அருகே இன்று காலை முதல் குவிந்தனர். இன்று கோட்டையை முற்றுகையிட இந்த அமைப்பினர் திட்டமிட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் ஜாக்டோஜியோ அமைப்பினர்களை சென்னைக்குள் வருவதற்கு முன்பே சென்னை எல்லையில் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் ஜாக்டோஜியோ அமைப்பினர்களின் முற்றுகை போராட்ட அறிவிப்பு காரணமாக சென்னை தலைமை செயலகத்தில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

பஹல்காமில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போர்க்குணம் இல்லை! - பாஜக எம்.பி சர்ச்சை கருத்து!

பாகிஸ்தான் யூடியூபருடன் நெருக்கம்.. ஜோதி மல்ஹோத்ரா குறித்த திடுக் தகவல்..!

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் போலீஸ்.. நாகை கலெக்டர் ஆபீசில் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments