Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளிநாட்டு வேலை… சம்மதிக்காத குடும்பம் – தற்கொலை செய்துகொண்ட நர்ஸ் !

Advertiesment
வெளிநாட்டு வேலை… சம்மதிக்காத குடும்பம் – தற்கொலை செய்துகொண்ட நர்ஸ் !
, புதன், 25 மார்ச் 2020 (11:17 IST)
சிங்கப்பூரில் வேலைக்கு சேர்வது தொடர்பாக குடும்பத்தாருடன் எழுந்த பிரச்சனைக் காரணமாக சென்னையைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ஆவடிக்கு அருகில் உள்ள பகுதியான தீனதயாளன் நகர் காந்தியடிகள் தெருவைச் சேர்ந்த தம்பதிகள் ஜோஷிரீனா.  செவிலியரான இவருக்குக் கடந்த கடந்த 2016 ஆம் சதீஷ் என்பவரோடு திருமணம் ஆகி ரேச்சல், ஜான் பிரபாகர் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் பணி புரிந்து வந்த ஜோஷரீனா ஒரு மாதத்துக்கு முன்னதாக தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து சிங்கப்பூர் சென்று நர்ஸாக வேலை பார்க்க முயற்சி செய்துள்ளார். ஆனால் இது அவரது கணவர் மற்றும் மாமனார் மாமியாருக்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இது சம்மந்தமாக குடும்பத்தினருடன் தகராறு எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினம் கணவர் மற்றும் குழந்தைகள் தூங்கிய பிறகு படுக்கை அறையை விட்டு வெளியே சென்று மற்றொரு அறையில் தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்ல இருக்காம ஊர் சுத்துவியா... விரட்டி விரட்டி வெளுத்த போலீஸ்!!