தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக சமீபத்தில் செல்வ பெருந்தகை அறிவிக்கப்பட்ட நிலையில் பலருக்கு ஆச்சரியமாக இந்த அறிவிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு வேறு நபரை நியமனம் செய்யப் போவதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியான நிலையில் சமீபத்தில் டெல்லி சென்று மல்லிகார்ஜுனே கார்கேவை சந்தித்த அழகிரி தேர்தல் வரை நானே தலைவராக இருக்கிறேன் என்று கேட்டு பார்த்தாராம்.
ஆனால் தமிழகத்தில் தலைவர் பதவியை மாற்றுவது உறுதி என்று சொல்லி அனுப்பிய மல்லிகார்ஜுனே கார்கேவுக்கு பெரும் சிக்கல் இருந்தது. காரணம் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஜோதிமணி, கார்த்திக் சிதம்பரம், விஜயதாரிணி, பிரின்ஸ் உட்பட 10 பேர்கள் வரையும் மோதியதாக தெரிகிறது.
ஏற்கனவே மல்லிகார்ஜுனே கார்கேவுக்கு செல்வ பெருந்தகை நெருக்கமானவர் என்பதால் அந்த நெருக்கத்தை பயன்படுத்தி அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை பெற்று விட்டார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால் அதே நேரத்தில் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி குறைந்தது பத்து தொகுதியாக அவர் பெற்றுக் கொடுக்காவிட்டால் அவர் மீது தலைமை அதிருப்தி அடைய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் சில காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்