பிகில் படத்திற்கு விஜய் சம்பளம் இவ்வளவுதானா? வருமான வரித்துறையின் தகவல்

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (16:56 IST)
பிகில் திரைப்படத்திற்காக விஜய் சம்பளமாக ரூபாய் 80 கோடி வாங்கியதாக சினிமா டிராக்காரர்கள் கதை அளந்த நிலையில் தற்போது உண்மையில் அவர் ரூபாய் 30 கோடி மட்டுமே சம்பளம் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
நேற்றும் இன்றும் நடந்த வருமான வரித்துறையின் சோதனையில் பிகில் படத்திற்காக நடிகர் விஜய் ரூ 30 கோடி சம்பளம் பெற்றதாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர். அப்படி என்றால் 80 கோடியில் மீதி 50 கோடியை அவர் கருப்பு பணத்தை பெற்றாரா? அல்லது அவரது சம்பளமே 30 கோடியா? என்ற கேள்வி எழுந்துள்ளது 
 
விஜய்யின் பனையூர் வீட்டில் கடந்த 18 மணி நேரமாக வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வரும் நிலையில் வருமான வரித்துறையினர் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். மேலும் விஜய்யிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவரிடமும் அவருடைய மனைவியிடமும் தற்போது வாக்குமூலம் பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னையை அடுத்த பனையூர் வீட்டில் ஆறு வருமானத் துறை அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணை செய்து வருவதாகவும் உறுதி செய்யப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments