Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறந்தவரின் உடலை உறவினர்களிடம் மாற்றித் தந்த மருத்துவமனை ஊழியர்

Advertiesment
இறந்தவரின் உடலை உறவினர்களிடம் மாற்றித் தந்த மருத்துவமனை ஊழியர்
, செவ்வாய், 2 ஜனவரி 2018 (16:13 IST)
மதுரையில் மருத்துவமனை ஊழியர் ஒருவர் இறந்த நபரின் உடலை உறவினர்களிடம் மாற்றிக் கொடுத்துள்ள சம்பவம்  பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி. இவர் வீட்டு வேலை செய்பவர். ஒத்தக்கடை அருகே சாலையை கடக்க முயன்றபோது விபத்தில் சிக்கி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அன்னலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  இறந்தவரின் உடலை பார்க்க சென்ற உறவினர்களை பார்க்க விடாமல், லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார் மருத்துவமனை ஊழியர். இதனால் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 
இதில் ஆத்திரமடைந்த ஊழியர் அன்னலட்சுமியின் உடலுக்குப் பதிலாக வேறு ஒரு பெண்ணின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார். அதனை கவனிக்காத உறவினர்கள் இறுதிச் சடங்குகளை செய்வதற்காக சென்றுள்ளனர். மயானத்தில் உடலில் கட்டப்பட்டிருந்த துணிகளை எடுத்து பார்த்தபோது அது அன்னலட்சுமியின் உடல் அல்ல என்பது தெரியவந்துள்ளது. பிறகு மீண்டும் அந்த உடலை எடுத்துக்கொண்டு மருத்துவமனை நிர்வாகிகளிடம் முறையிட்டுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் சம்பத்தப்பட்ட ஊழியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து அன்னலட்சுமியின் உடலை உறவினர்கள் பெற்று சென்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது; சுமையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு