Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுமுறை தினம் எதிரொலி..! குற்றாலத்தில் அலைமோதும் கூட்டம்..!!

Senthil Velan
ஞாயிறு, 2 ஜூன் 2024 (13:49 IST)
இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
 
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் கடந்த சில நாட்களாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

வெள்ளப்பெருக்கில் சிறுவன் ஒருவன் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சில நாட்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க மக்கள் அனுமதிக்கப்படவில்லை.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு குறைந்து குற்றாலம் அருவிகளில் சீரான தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் அருவியில் குளிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தற்போது நீர்வரத்து குறைவாகவே இருந்த போதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

ALSO READ: ஓட்டுனர் உரிமம் ரத்து - காரை ஓட்டியது ஏன்.? டிடிஎஃப் வாசனுக்கு நோட்டீஸ்..!!
 
இதேபோல் பழைய அருவி மற்றும் ஐந்தருவி ஆகிய அருவிகளிலும் நீர் வரத்து குறைந்துள்ளபோதும் பொதுமக்கள் ஆர்வத்துடன் குளிப்பதற்காக வருகை தருகின்றனர். ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருப்பதால், போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வனத்துறையினரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கென்யாவை அடுத்து இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதா?

22ஆம் தேதி ஆகியும் இன்னும் ரேசன் கடையில் துவரம் பருப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்.!

இந்தியாவில் அறிமுகமானது OPPO Find X8! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

ரஜினியை சந்தித்ததே அரசியல்தான்.. அரசியலுக்காகதான்! - சீமான் குடுத்த ட்விஸ்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments