Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆங்கில புத்தகங்களிலும் ஹிந்தி.. கடிதத்தில் ஹிந்தி.. என்னது இது? - சு.வெங்கடேசன் ஆதங்கம்!

Advertiesment
Su Vengadesan

Prasanth Karthick

, செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (14:04 IST)

NCERT பாட புத்தகங்களில் இந்தியே ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

 

மத்திய அரசின் NCERT பாடமுறையின் கீழ் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களின் புத்தகங்களிலும் ஆங்கில எழுத்தில் இந்தியில் கணித பிரகாஷ், சந்தூர் என பெயரிடப்பட்டுள்ளன.

 

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன் “ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி! ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி! என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம். பி. களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி மாணவன் பையில் அரிவாள்.. . முக ஸ்டாலின் அலங்கோல ஆட்சி: நயினார் நாகேந்திரன்