உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் அறிமுகம் தேவையில்லாத நபர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய 82 ஆவது வயதில் மார்ச் 8 ஆம் தேதி தன்னுடைய முதல் சிம்ஃபொனியை அரங்கேற்றினார். இதையடுத்து அவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் தற்போது நிறைய நேர்காணல்களை அளித்து வருகிறார்.
அதில் ஒரு ஏன் தன்னுடைய தந்தையைப் பற்றி அதிகம் பேசியதில்லை என்பது குறித்து பேசியுள்ளார். அதில் “நான் என்னுடைய தாயைப் பற்றி நான் அதிகமாகப் பேசியிருக்கிறேன். ஆனால் தந்தையைப் பற்றி பேசியதில்லை. ஏனென்றால் என் அப்பா எனக்கு 9 வயதிருக்கும் போதே அப்பா இறந்துவிட்டார். அதனால் அவர் பற்றி எனக்கு நிறைய நினைவுகள் இல்லை. மரியாதை மட்டும்தான் உண்டு” எனக் கூறியுள்ளார்.